சௌ சௌ! பெயர் எப்படி வந்திருக்கும்?
ம்…யாருக்கும் தெரியுமோ? எனக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்க.
இதுக்குப் பெயர் பெங்களூர் கத்தரிக்காய்னும் சொல்றாங்க.
அந்தக் காலத்துல ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து நம்ம ஊருக்கு வந்த விருந்தாளிங்க, நம்ம நாட்டுல விட்டுவிட்டுப் போன காய்தான் சௌசௌ.
வாய்க்கு ருசியான கூட்டையும், சோற்றுக்குச் சுவையான குழம்பையும் சமைப்பதற்கு ஓர் அருமையான காய் மெல்பெர்ன் வீட்டுத் தோட்டத்திலேயே விளையுது. அது போதும்.
இதிலே இரும்பு சத்து இருக்கு! இரத்தச் சிவப்பணுவைக் கூட்டி விட்டமின் பீ2 குறைபாட்டை நீக்கும்.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவையும். கொழுப்பையும் குறைக்கும்!
எது எப்படியோ, கையில இருக்கிற காசு மிச்சமாகுது! அது மட்டும் உறுதி.
குறிப்பு:
காய்கறி சமையல் கழிவுகளே இதற்குப் போதுமான உரம்.
வேப்ப எண்ணை இருந்தால் விஷப் பூச்சும், புழுவும் விருந்தாளியா வராது!
தேனீக்கள் அதிகம் வரும், அதனால் என்ன! காய்களும் அதிகமாகக் காய்க்கப்போகுது!
6 மாசத்திலே அறுவடை ஆரம்பம்.
ஒரு கொடிக்கு 25 கிலோ நிச்சயமாக உண்டு. (அல்வா செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்)
குளிரூட்டி வைக்கவேண்டாம். வெளியிலேயே 4 வாரம் வரைக்கும் வாடாம, வதங்காம இருக்கும்.
அப்புறம் என்ன யோசிக்கிறீங்க! வாங்க, வீட்டிலேயே ஒரு காய்கறிப் பண்ணையை உருவாக்கலாம்!